லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கை பெரும்பாலும் நாடோடிகளைப் போன்றது. அவர்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை லாரியிலேயே கழிக்கிறார்கள், சில நேரங்களில் தொடர்ந்து 24 மணிநேரம் கூட வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும்.
வழக்கமாக ஓட்டுநர்கள் தங்கும் விடுதிகள் அல்லது தாபாக்களில் சாப்பிடுவார்கள், ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், வேகமாகச் செல்லும் லாரியின் உள்ளே ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலேயே ஒருவர் அடுப்பைப் பற்றவைத்து மிகவும் நிதானமாக ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறார்.
வாகனம் குலுங்கினாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சமைக்கும் விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் நேரத்தைச் சேமிக்க ஓட்டுநர் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறினாலும், இன்னும் சிலர் ஓடும் வண்டியில் சமைப்பது ஆபத்தானது என்றும், சாப்பிடுவதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குவதுதான் பாதுகாப்பானது என்றும் அறிவுரை கூறுகின்றனர்.
View this post on Instagram
“>
“நல்ல முயற்சிதான், ஆனால் பாதுகாப்பிலும் கவனம் தேவை” என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
