தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு விரைவில் சிறைக்குச் செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அருண்ராஜ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இத்தனை நாட்களாக இதனை மூடி மறைக்கப் பார்த்த அரசு, இப்போது வேறு வழியின்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
”வெளியில் நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணை நாடகத்தை ஆரம்பித்துள்ளீர்கள்” என்று விமர்சித்த அருண்ராஜ், இது உண்மையான விசாரணையா அல்லது அமலாக்கத்துறை (ED) நேரடியாகக் களமிறங்கி உள்ளே தள்ளிவிடும் என்ற பயத்தினால் போடப்பட்ட உத்தரவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். TVK கட்சியின் இந்தத் துணிச்சலான குற்றச்சாட்டு திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் புகாரில் அமைச்சர் நேருவின் பெயர் அடிபடுவது 2026 தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
