இன்றைய இளைஞர்கள் மத்தியில் சூப்பர் பைக்குகள் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் விலை உயர்ந்த பைக்குகளை காண்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. பெட்ரோல் பங்க் ஒன்றில் நின்றிருந்த சூப்பர் பைக்கின் விலையை கேட்டு, அங்கிருந்த முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ராஜேஷ் பெனிவால் என்ற பயனர் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட ஒரு சூப்பர் பைக் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு வருகிறது. அதன் வித்தியாசமான தோற்றத்தை பார்த்த அங்கிருந்த பெரியவர் ஒருவர், “தம்பி, இந்த வண்டி என்ன விலை?” என்று சாதாரணமாக கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் மிகவும் கூலாக, “48 லட்ச ரூபாய்” என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்டவுடன் அந்த பெரியவரின் முகம் அப்படியே மாறிவிடுகிறது. ஒரு நிமிடம் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகி, “ஒரு பைக்கின் விலை இவ்வளவு இருக்குமா?” என்று வியப்பில் ஆழ்ந்தனர்.
Uncle लोग जबाब सुनकर डिप्रेशन में आ गए 🤣🤣48 lakh 🤣🤣 सुनकर 😳 pic.twitter.com/k3zuwRZbog
— Rajesh Beniwal (@BeniwalRajesh1) January 6, 2026
’டிப்ரஷனுக்கு’ சென்ற பெரியவர்கள்! – கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்த வீடியோவை பகிர்ந்த ராஜேஷ், “விலையை கேட்டதும் அங்கிருந்த அங்கிள்கள் அனைவரும் டிப்ரஷனுக்கு சென்றுவிட்டனர்” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமிக்கும் பணத்தில் ஒரு பைக்கா? அல்லது இந்த விலையில் ஒரு சொகுசு வீடே கட்டிவிடலாமே? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இதுபோன்ற சூப்பர் பைக்குகளுக்கு அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுவதால், அவற்றின் விலை பல கோடிகளை கூட எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
