நமது அன்றாடப் பழக்கவழக்கங்கள் நீண்ட கால அடிப்படையில் நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரமி லண்டன் விளக்குகிறார். மது அருந்துவது உடலின் அனைத்து செல்களுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், அதற்கு அவர் 10-க்கு 10 என்ற அதிகபட்ச ஆபத்து அளவை வழங்குகிறார்.

அதேபோல், புகைபிடித்தல் மற்றும் தனிமை ஆகியவை இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிப்பதுடன், உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கின்றன. குறிப்பாக, நீண்ட காலத் தனிமை என்பது சிகரெட் பிடிப்பதற்கு இணையான பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார்.

உணவு மற்றும் சமையல் பழக்கங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

அதேபோல், பிளாஸ்டிக் வெட்டுப்பலகைகளை  பயன்படுத்துவதால், ஆண்டுக்குச் சுமார் 10 கிரெடிட் கார்டுகளுக்கு இணையான நுண் பிளாஸ்டிக்கை நாம் உட்கொள்கிறோம். இது ஹார்மோன் குறைபாடுகளையும் கருவுறுதல் பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jeremy London, MD (@drjeremylondon)

“>

எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு மதுவைத் தவிர்ப்பதுடன், பிளாஸ்டிக் பலகைகளுக்குப் பதில் மரப்பலகைகளைப் பயன்படுத்துவதும், நண்பர்களுடன் சமூகத் தொடர்பில் இருப்பதும் மிகவும் அவசியம்.