இந்தியாவில் திருமணக் காலங்களில் பின்பற்றப்படும் முக்கியச் சடங்குகளில் ஒன்றான ‘பெஹ்லி ரசோய்’ எனப்படும் முதல் சமையல் சடங்கு, பொதுவாகப் புது மணப்பெண்ணால் மட்டுமே செய்யப்படும். ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், காலங்காலமாகப் பின்பற்றப்படும் இந்த மரபை மாற்றி, புது மாப்பிள்ளை தனது மாமனார் வீட்டில் முதல் சமையல் சடங்கைச் செய்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Yogesh Juneja (@yogeshjuneja05588)

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சமையலறையில் தனது மாமனார் வீட்டாருக்காக அந்த இளைஞர் பிட்சா மற்றும் காளான் உணவுகளை மிகவும் ஈடுபாட்டுடன் சமைத்துப் பரிமாறினார். குடும்பத்தினர் அனைவரும் அவரது சமையலைப் பாராட்டி அன்புடன் வரவேற்ற இந்த நிகழ்வு, வீட்டு வேலைகள் மற்றும் சடங்குகள் பெண்களுக்கு மட்டுமேயானவை அல்ல என்ற உயரிய செய்தியைத் தருகிறது.

சமத்துவத்தையும் குடும்பப் பிணைப்பையும் பறைசாற்றும் இந்த வீடியோ, ‘மாப்பிள்ளையின் முதல் சமையல்’ என்ற பெயரில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது.