உபேர் வாடகை கார் சேவையில் நபர் ஒருவர் கவனக்குறைவாக தான் இருக்கும் இடத்தையே சென்றடைய வேண்டிய இடமாகவும் பதிவு செய்த சுவாரசியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த அந்த நபர், அவசரத்தில் தனது வீட்டு முகவரிக்கு பதிலாக தான் நின்றிருந்த அதே ரயில் நிலையத்தையே இலக்காகக் குறிப்பிட்டு காரை முன்பதிவு செய்துள்ளார்.

 

கார் வந்ததும் உள்ளே ஏறிய அவரிடம், ஓட்டுநர் முகவரியைச் சரிபார்த்த போதுதான் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர். சுமார் 100 அடி தூரத்தைக் கூட கடக்காத இந்த பயணத்திற்கு முதலில் 160 ரூபாய் கட்டணம் காட்டப்பட்டு, பின்னர் 118 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

பயணம் செய்யாமலேயே குறைந்தபட்சக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருந்த இந்த வேடிக்கையான அனுபவத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.