தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை ஆகிய இரு நகரங்களில் நிலவும் வாழ்க்கை முறை குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. டெல்லியில் வசித்துவிட்டு மும்பைக்கு இடம்பெயர்ந்த நபர் ஒருவர் வெளியிட்ட பதிவில், மும்பையின் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக இருப்பதாகவும், ஒரு சிறிய அறைக்கு வசூலிக்கப்படும் வாடகையில் டெல்லியில் ஒரு பெரிய வீட்டையே வாடகைக்கு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Living in Mumbai as a Dilliwala is horrific
byu/Better-Ad4065 indelhi
ஜூகு போன்ற வசதியான பகுதிகளில் வசித்தாலும் போக்குவரத்து நெரிசல், மழைக்கால பாதிப்புகள் மற்றும் மருத்துவச் செலவுகள் மும்பையில் மிக மோசமாக இருப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், மும்பை மக்கள் அடிப்படை வசதிக் குறைபாடுகளை நகரின் பெருமையாகக் கருதி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், டெல்லியின் உள்கட்டமைப்பு வசதிகளே சிறந்தது என ஒரு தரப்பினரும், டெல்லி மக்களின் அணுகுமுறை மற்றும் பாதுகாப்பு குறித்து மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
