அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ள கமருதீன் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு தனியார் யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தின் போது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக இவர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காவல்துறை விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த விவகாரம் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

மேலும் மறுபுறம், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக அக்கறை கொண்டவராக அறியப்படும் விஜய் சேதுபதி, இத்தகைய சர்ச்சைக்குரிய நபர்களைத் தட்டிக்கேட்காமல் இருப்பதும், நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தத் தவறுவதும் அவரிடம் சமூகப் பொறுப்பு இல்லாததையே காட்டுகிறது என்று நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு மக்கள் செல்வனாக பொதுப் பிரச்சினைகளில் குரல் கொடுக்கும் அவர், தனது சொந்த நிகழ்ச்சியில் அரங்கேறும் இதுபோன்ற அவதூறுகளைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.