புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது மக்களின் மீதான அரசின் அக்கறையே தவிர, இது ஓட்டுக்கான அரசியல் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் அமித் ஷாவின் பருப்பு ஒருபோதும் வேகாது என்றும், அவரை தமிழக மண்ணில் மண்ணைக் கவ்வ வைப்போம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில் கூட்டமே இல்லாத காரணத்தால் தான் அவர் மேடை ஏறத் தாமதமானது என்றும், கூட்டணிக் கட்சியான அதிமுகவே அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது பாஜகவின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அவர் சாடினார்.