மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் யோகாசன நிலைகளைச் சித்தரிக்கும் பொதுச் சுவர் ஓவியங்கள் மர்ம நபர்களால் ஆபாசமான முறையில் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த அந்த ஓவியங்களில் சில சமூக விரோதிகள் திட்டமிட்டே கீறல்களை ஏற்படுத்தி இழிவுபடுத்தியுள்ளனர்.
Women are not safe even in Grafitti
In Gwalior, Madhya Pradesh, a young man tried fixing graffiti of Yoga poses on the wall which was defaced by miscreants. pic.twitter.com/LwnoFOWUiX
— Piyush Rai (@Benarasiyaa) January 5, 2026
சமூகத்தில் நிலவும் இத்தகைய பெண்களுக்கெதிரான வக்கிரமான மனப்போக்கிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் முன்வந்து சிதைக்கப்பட்ட ஓவியங்களை மீண்டும் சீரமைத்து வர்ணம் தீட்டியுள்ளார்.
பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அவமதிப்புகளைச் சகித்துக்கொள்ளக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அந்த இளைஞர் மேற்கொண்ட இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன் பெண்ணியப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு சிறு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
