உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து வெள்ளை நிற உலோகத் துண்டுகள் கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சிதறிக் கிடந்த அந்த உலோகத் துண்டுகளை வெள்ளி என்று தவறாகக் கருதிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு அவற்றை போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கத் தொடங்கினர்.
चलते ट्रक से चांदी गिरते देख भीड़ टूट पड़ी ट्रक वाला आगे निकल गया।
हापुड़ हाईवे पर चांदी की बारिश चलते ट्रक से गिरी चांदी लूटने को मची भगदड़ हाईवे पर चांदी बटोरते लोगों का वीडियो वायरल। pic.twitter.com/2dROinOC4S
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) January 5, 2026
இதனால் அந்த முக்கிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹாபூர் தேஹாத் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்ததுடன் சிதறிக்கிடந்த உலோகத் துண்டுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த உலோகத் துண்டுகள் உண்மையான வெள்ளியா அல்லது வேறு ஏதேனும் உலோகமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தற்போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர் அந்த லாரியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
