சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இளம் பெண்ணின் மேக்கப் வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அழகான சேலை மற்றும் நகைகளுடன் மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் ஒரு பெண், மெல்ல மெல்ல தனது முகத்தில் இருக்கும் மேக்கப்பை ஒரு துணியால் துடைத்து எடுக்கிறார்.
மேக்கப் கலைந்த பிறகு அந்தப் பெண்ணின் முகம் முற்றிலும் வேறொரு தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், “பார்லர் வைத்து நடத்துபவர்களுக்கு நரகத்தில் தான் இடம்” என வேடிக்கையாகவும் காட்டமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Parlour walon ka alag se narak me hissab hoga 🙂 pic.twitter.com/6z0qk9tJh8
— MemeCreaker (@MemeCreaker) January 4, 2026
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த பல பயனர்கள், “இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை யாராலும் தாங்க முடியாது,
அந்தப் பையனின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்றும், “இப்படியெல்லாம் பொய் அழகு காட்டும் பார்லர் உரிமையாளர்களுக்குத் தனி தண்டனை கொடுக்க வேண்டும்” என்றும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ, தற்கால மேக்கப் கலை எந்த அளவுக்கு மனிதனின் நிஜத் தோற்றத்தையே மாற்றுகிறது என்பதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
