விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்க்குகள் விமானத்தின் உள்ளே எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய உத்தரவின்படி, பயணிகள் விமானத்தில் பவர் பேங்குகளை எடுத்துச் செல்லலாம், ஆனால் விமானம் பறக்கும் போது அவற்றை மின்னணு சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது சார்ஜ் செய்வதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பவர் பேங்குகளை பயணிகள் தங்களின் செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது; மாறாக, அவற்றை கேபின் பேக்குகளில் மட்டுமே கையோடு வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளை மீறி விமானத்திற்குள் பவர் பேங்க் பயன்படுத்தும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் கொண்டுவந்த விமானப் பயண பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இனி வரும் காலங்களில் விமான நிறுவனங்களால் கடுமையாகப் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.