அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகையில், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் அதிமுகவில் உறுப்பினர்களாகச் சேராவிட்டாலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் அரசியல் முக்கியத்துவத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி உணர்ந்துள்ளதாகவும், எப்படியாவது அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் பரபரப்புத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.