பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பைப் பெற ‘கார் டாஸ்க்’ நடத்தப்பட்டது.

இதில் மீதமுள்ள 9 போட்டியாளர்களும் காருக்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். அப்போது, சாண்ட்ராவை ‘ஸ்கேம்-ட்ரா’ (Scam-dra) எனக் கிண்டலடித்த பார்வதியும் கம்ருதீனும், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்க்கின் உச்சக்கட்டமாக, பார்வதி சிக்னல் கொடுக்க, கம்ருதீன் பலமாகச் சாண்ட்ராவை காரில் இருந்து வெளியே தள்ளினார். கீழே விழுந்த வேகத்தில் சாண்ட்ராவுக்கு திடீரென வலிப்பு (Seizure) ஏற்பட்டு உடல் நடுங்கத் தொடங்கியது. இதைப் பார்த்த விக்ரம், சபரி மற்றும் கானா வினோத் ஆகியோர் டாஸ்க்கை அப்படியே விட்டுவிட்டு, சாண்ட்ராவை மீட்க ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “விளையாட்டு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும்” என ரசிகர்கள் மற்றும் முன்னாள் போட்டியாளர்கள் கொதித்து வருகின்றனர்.