சீனாவில் லிஃப்ட் கதவு மூட தாமதமானதால் ஆத்திரமடைந்த சிறுவன் ஒருவன், லிஃப்ட் பேனலை அடித்து நொறுக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லிஃப்ட் உள்ளே நுழையும் சிறுவன் ஒரு பட்டனை அழுத்துகிறான். ஆனால், ஒரு சில வினாடிகள் ஆகியும் கதவு மூடாததால் பொறுமை இழந்த அவன், ஆத்திரத்தில் அங்கிருந்த பட்டன்களை சரமாரியாகக் குத்துகிறான்.

அப்போது திடீரென லிஃப்ட்டின் முழுக் கட்டுப்பாட்டுப் பலகையும்  பெயர்ந்து கீழே விழுந்து நொறுங்குகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. லிஃப்ட் பேனல் உடைந்தவுடன், அந்தச் சிறுவன் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக வெளியேறிச் செல்கிறான். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கொந்தளிக்கின்றன.

“>

அந்தச் சிறுவனின் பொறுப்பற்ற செயலைக் கண்டிப்பதோடு, லிஃப்ட் பேனல் இவ்வளவு எளிதாகக் கீழே விழுந்ததைக் கண்டு அதன் தரம் குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.