சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் நம்மை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்திவிடுகின்றன. அந்த வகையில், இளைஞர் ஒருவர் பிச்சையெடுப்பதற்காகக் கையாண்ட ஒரு வித்தியாசமான முறை தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வழக்கமாகப் பிச்சையெடுப்பவர்கள் தட்டில் காசு கேட்பார்கள், ஆனால் இந்த நபர் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கையில் ஒரு க்யூஆர் கோட் அட்டையை ஏந்தி பிச்சை கேட்கிறார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் வழிப்போக்கர்கள், அவரின் இந்த ‘டிஜிட்டல்’ முயற்சியைக் கண்டு ஆச்சரியமடைந்து தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.
India is not for beginners truly 😭 pic.twitter.com/MJmnZmpLYF
— Wellu (@Wellutwt) January 2, 2026
“>
இந்த வீடியோ டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டத்தைக் காட்டுவது போல் நகைச்சுவையாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “சில்லறை இல்லை என்று இனி யாராலும் சாக்கு சொல்ல முடியாது” எனப் பலரும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் டிவி9 பாரத்வர்ஷ் வாயிலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பலரது கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், காலத்திற்கேற்ப பிச்சை எடுக்கும் முறையிலும் புகுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம் அனைவரையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளது.
