விலங்குகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எப்போதும் வரவேற்பைப் பெறும் நிலையில், பராமரிப்பாளரைப் பார்த்து சிம்பன்சி ஒன்று கைகளைச் சுத்தம் செய்யும் நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் வசிக்கும் சான்ட்ரா என்ற சிம்பன்சி, தனது பராமரிப்பாளர் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதைக் கூர்ந்து கவனித்து, அதேபோல் தானும் ஒரு தூரிகை மற்றும் சோப்புக் கரைசலைக் கொண்டு தனது கைகளைத் தேய்த்துச் சுத்தம் செய்கிறது.
Sandra the Orangutan started washing her hands after observing her caretakers doing it 🦧 pic.twitter.com/vE4VJ5GaJw
— Nature Unedited (@NatureUnedited) January 1, 2026
சுமார் 16 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்தக் காணொளி, விலங்குகளின் அபாரமான கவனிக்கும் திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இயற்கையிலேயே புத்திசாலித்தனம் கொண்ட ஒராங்குட்டான்கள் மனிதர்களின் செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் குணம் கொண்டவை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
சான்ட்ராவின் இந்தச் சமர்த்தான செயலைப் பாராட்டி லட்சக்கணக்கான இணையவாசிகள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.
