பதறவைக்கும் இந்தச் சம்பவம் ஒரு பரபரப்பான சாலையோரம் நடந்துள்ளது. அங்கு நபர் ஒருவர் என்ன காரணமென்று தெரியாமல் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்துள்ளார்.

அந்த வழியாகக் குப்பை சேகரிக்க வந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர், மயங்கிக் கிடப்பவருக்கு முதலுதவி செய்யவோ அல்லது போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவோ முன்வரவில்லை.

மாறாக, அந்த நபர் மயக்கத்தில் இருப்பதைக் கண்டு, சத்தமில்லாமல் அவர் காலில் இருந்த விலையுயர்ந்த ஷூக்களைக் கழற்றித் திருடிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

இந்த மொத்தக் காட்சியும் அங்கிருந்த ஒரு கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவரிடம் இருக்கும் பொருளைத் திருட எப்படி மனசு வந்தது?” எனப் பலரும் அந்தத் தொழிலாளியைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது சமூகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது என நெட்டிசன்கள் ஆவேசமடைந்துள்ளனர்.