சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ செம வைரல். அதில், ஒரு பைக் ஷோரூமில் இருக்கும் ஒரு பாட்டி, திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி ஓடும் அதிவேக டுகாட்டி பைக்கை துரத்திச் சென்று, அப்படியே அதன் மீது தாவிக் குதித்து தாறுமாறாக ஓட்டிச் செல்கிறார். ஒரு நிமிடம் பார்ப்பவர்களுக்கு “என்னது.. நிஜமாவே அந்த பாட்டி தான் ஓட்டுறாங்களா?” எனத் தலை சுற்ற வைத்துவிட்டது அந்த வீடியோ.
வீடியோவைப் பார்த்துவிட்டுப் பலரும் அந்த பாட்டியின் தைரியத்தைப் பாராட்டி வந்த நிலையில், இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்ற உண்மை தெரியவந்துள்ளது. ‘ஹைப்பர்-ரியலிஸ்டிக்’ (Hyper-realistic) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிஜமாகவே நடப்பது போலவே இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
🚨🔥 Nothing stops Dadi from riding her bike!
Dadi is ON FIRE 🏍️💨
Even the showroom guys are in shock 🫢😱
AI couldn’t keep up either 😄#HeavyDriverDadi #OnFire #AIvsDadi #FridayFitness#HinduSanskriti #CongressInsultedBabasaheb pic.twitter.com/6I9Kd3BAZ9— Zonunsangi (@sangizonun15) January 2, 2026
சமீபகாலமாக இது போன்ற AI வீடியோக்கள் இணையத்தில் அதிகரித்து வருவதால், எதையும் நம்புவதற்கு முன் ஒருமுறை சரிபார்ப்பது அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
