சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு பள்ளியின் ஆண்டு விழாவின் போது, மாணவர்கள் சீருடையுடன் மேடையில் ஏறி, நாகரிகமற்ற பாடல்களுக்கு மிகவும் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடியுள்ளனர். கல்வியைக் கற்க வேண்டிய இடத்தில், பள்ளிச் சீருடையிலேயே மாணவர்கள் இவ்வாறு தரமற்ற முறையில் நடந்து கொள்வது காண்போரை அருவருப்படையச் செய்துள்ளது.
என்ன கருமம் டா இது🤮
இவங்கள மனிதர்களா மாற்றவே இன்னும் பல ஜென்மங்கள் வேணும் போல.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு ,,,
வாழ்க பள்ளி கல்வித்துறை வாழ்க கல்வி அமைச்சர் வாழ்க திராவிட மாடல்…
பள்ளி ஆண்டுவிழா என்ற பெயரில் சீரழியும் இளைஞர்கள் pic.twitter.com/N33OKh6Wd7
— ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK (@ADMK_Trends) January 1, 2026
இச்சம்பவம் தமிழகக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பள்ளி ஆண்டு விழா என்ற பெயரில் இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் சீரழிந்து வருவதாகப் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று பெருமை பேசும் வேளையில், மாணவர்களின் இத்தகைய போக்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக எக்ஸ் (X) தளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
