திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்புகள் நிலவி வருவதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு தூய்மையான ஆட்சி அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் த.வெ.க-வில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குத் தலைமை முடிவெடுக்கும் என்பது போலப் பதிலளித்தார்.
இதற்கிடையே, வெள்ளக்கோவில் பகுதியில் அலுவலகம் திறக்க வந்த செங்கோட்டையனை அக்கட்சியின் தொண்டர்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: வெள்ளகோவில் நகர அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள்#Tiruppur | #TVK | #TVKVijay | #Sengottaiyan pic.twitter.com/SvRegJIeAs
— PttvOnlinenews (@PttvNewsX) January 1, 2026
“>
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்க்காக உழைத்த தங்களுக்குக் கட்சியில் உரியப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று அவர்கள் ஆத்திரத்துடன் முறையிட்டனர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்துப் பேசி உரியத் தீர்வு காணப்படும் என்று செங்கோட்டையன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
