2026 புத்தாண்டின் முதல் நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் அதிமுகவின் ‘கல கல’ அரசியல்வாதி செல்லூர் ராஜு. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், தனது கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, “மாண்புமிகு முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று மீனாட்சி அம்மனிடம் வேண்டிக்கொண்டேன்” எனத் தாரை தாரையாகக் கொட்டினார்.
முதலமைச்சர் என்றும் முதலமைச்சராகவே இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த செல்லூர் ராஜு..
ஆழ் மனசு செய்தி, வந்திருச்சு வாய் வழியா!! pic.twitter.com/heEQ9RrLLy
— Kumaran Karuppiah (@2kkumaran) January 1, 2026
செல்லூர் ராஜு இப்படிப் பேசியதைக் கேட்டு அருகில் இருந்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆனால், இந்த வீடியோவை கையில் எடுத்த திமுக ஐடி விங் மற்றும் உடன்பிறப்புகள், “புது வருஷத்துல அண்ணன் காதுல தேன் வந்து பாயுற மாதிரி பேசியிருக்காரு; ஆழ்மனசுல இருக்கிறது தான் வெளிய வந்திருக்கு” எனச் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
முன்னதாக ‘தெர்மாகோல்’ விவகாரம் மூலம் உலகப் புகழ்பெற்ற செல்லூர் ராஜு, தற்போது புத்தாண்டு அன்றே ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பேசி மீண்டும் ஒரு ‘வைரல்’ நாயகனாக உருவெடுத்துள்ளார்.
