தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சென்னை பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் நிர்வாகிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அவர் ஊர் திரும்பினார்.
ஆனால், கடந்த 25-ஆம் தேதி அவர் தனது வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வீடு திரும்பிய அஜிதா, தனது (X) தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தொண்டர்களின் பிரார்த்தனையால் குணமடைந்ததாகவும், 2026-ஆம் ஆண்டு விஜய்யை முதலமைச்சராக அரியணையில் ஏற்ற முன்பை விட அதிக வேகத்துடன் களப்பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
