இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையைச் செய்வது மனிதகுலத்தின் கடமை. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் மதத்தின் பெயரால் நடந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான புனியா பாய் என்ற மூதாட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் இறந்த பிறகு அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 3 நாட்களாக மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. ஊர்க்காரர்களின் பிடிவாதத்தால் செய்வதறியாது திகைத்த அவரது குடும்பத்தினர், வேறு வழியின்றி மீண்டும் இந்து மதத்திற்கே மாறுவதாக ஒப்புக்கொண்டனர். இதற்கான சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட பின்னரே, புனியா பாயின் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் அனுமதித்துள்ளனர். இறந்த பிறகும் ஒருவருக்கு நேர்ந்த இந்த அவலம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
