கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 29) கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகினர்.

அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்புகளுக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து இந்த விசாரணையில் முக்கியக் கேள்விகள் எழுப்பப்படுவதாகத் தெரிகிறது.