இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷெரி பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் நீண்ட கால சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த மே மாதம் மதுபோதையில் இருந்த சிறுமியை கடத்திச் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக ஜன் ஜஹன்பெஸ் மற்றும் நைசல் ஆகிய 17 வயதுடைய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்கிய வார்விக்ஷெரி நீதிமன்றம், குற்றவாளிகளின் கொடூரச் செயலை உறுதி செய்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கியுள்ளது.
இதில் முதல் குற்றவாளியான ஜன் ஜஹன்பெஸுக்கு 10 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனையும், மற்றொரு சிறுவனான நைசலுக்கு 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
