பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரயில் சேவை, மெக்சிகோவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 98 பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஒசாகா மற்றும் வேராக்ரூஸ் மாநிலங்களின் எல்லைக்கு அருகிலுள்ள நிஜாண்டா பகுதியில், ரயில் திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரத்தில் ரயிலில் மொத்தம் 241 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
13 people DEAD as train derails in Asunción Ixtaltepec, Mexico
The Mexican Interoceanic Train had only been running since 2023
98 people injured in accident pic.twitter.com/tzZfFZzHOG
— RT (@RT_com) December 29, 2025
பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முக்கியமான இன்டர்-ஓசியானிக் ரயில் சேவை, விபத்து காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒசாகா மாநில அரசு தெரிவித்துள்ளது.
