முசிறியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்களது கட்சி கூட்டணிக் கட்சிகளிடம் இத்தனை இடங்கள் வேண்டும் என்று ஒருபோதும் பேரம் பேசாது என்று தெரிவித்தார்.

மற்ற சிலரைப்போல அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதற்காக யாருக்கும் எந்தவித நிர்பந்தமும் அளிக்க மாட்டோம் என்றும், கண்ணியமான முறையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.