இந்திய இரயில்வேயில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று நம்பும் பயணிகளுக்குப் பேரிடியாக ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் பொதுப் பெட்டிகளிலும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளிலும் மட்டுமே காணப்பட்ட சட்டவிரோத வசூல் மற்றும் தொந்தரவுகள், தற்போது Third AC (3AC) பெட்டிகளிலும் நுழையத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Now extortion has started even inside Third AC coaches and not ₹10 or ₹20, but a straight ₹501.
Where are the Railway Protection Force (RPF) and security officials? Has passenger safety been reduced to a joke?
First, passengers are buy expensive tickets, and then they are… pic.twitter.com/rn6LTd3j5t— The Nalanda Index (@Nalanda_index) December 27, 2025
சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு கும்பலாக வரும் பெண்கள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிப்பது பதிவாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், அவர்கள் கேட்பது 10 அல்லது 20 ரூபாய் அல்ல, நேரிடையாக ₹501 கேட்டு மிரட்டுகிறார்கள். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி, நிம்மதியாகப் பயணம் செய்யலாம் என்று நினைக்கும் பயணிகளுக்கு இது பெரும் மன உளைச்சலைத் தருகிறது.
