மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் மனிதநேயமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பாஜக பிரமுகர் அசோக் சிங் என்பவர், ஒரு இளம்பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு காணொளி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பார்ப்போரை ரத்தம் கொதிக்க வைத்துள்ளது.
"BJP leader threatens rape victim." ⚠️🚨👹
Victim: "I will post your video on social media."
"So what? It won't affect me at all." 😡
BJP leader Ashok Singh allegedly raped a girl at gunpoint in MP's Satna & threatened the victim, who is crying for justice. Terrible! pic.twitter.com/0NalGB9SU2
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 27, 2025
அந்தக் காணொளியில், பாதிக்கப்பட்ட பெண் கதறி அழுது நீதி கேட்கிறார். “உன்னுடைய இந்தச் செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்” என்று அந்தப் பெண் எச்சரிக்கும்போது, அந்த நபர் கொஞ்சமும் அச்சமின்றி, “அப்படிச் செய்தால் எனக்கு என்ன? அதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று மிகுந்த திமிருடன் பேசுகிறார்.
ஒரு பக்கம் அந்தப் பெண் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்க, மறுபக்கம் அதிகாரத் திமிரில் அந்த நபர் பேசும் வார்த்தைகள் சட்டத்தின் மீதான பயமின்மையைக் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
