மகாராஷ்டிர மாநில காவல்துறையினரின் மனிதநேயத்தைப் போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மது அருந்திய நிலையில் இருந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

 

பின்னர் அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த காவலரே வாகனத்தை ஓட்டிச் சென்று தம்பதியரை மருத்துவமனையில் சேர்த்தது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றாலும், உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட நாடக வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வீடியோவை முதலில் பகிர்ந்த நபர் இதற்கு முன்னரும் இது போன்ற பல கற்பனையான காட்சிகளை உண்மைச் சம்பவம் போல பதிவேற்றியுள்ளார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் உணர்ச்சிகரமான தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே மக்கள் நம்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.