தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியா தலைநகர் கோலம்பூரில் உள்ள மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் சுமார் 90 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி தளபதி கச்சேரி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட நிலையில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பாட்டு பாடி நடனம் ஆடினார். அந்த வகையில் பிரபல நடிகர் விஜய்யின் தாயாரும் பாடகியமான சோபா சந்திரசேகரும் மேடையில் பாடினார். அப்போது நாளை ஏழைகள் நினைத்து விட்டால் நீங்களும் சிஎம் தான் என்ற ஒரு வரியை அவர் பாடியும்போது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர். மேலும் அவர் பாடிய பாடலின் அந்த ஒரு வரிக்கு மொத்த ரசிகர்களும் அரங்கத்தையே அதிர வைக்கும் அளவிற்கு சத்தமிட்ட நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
