கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 7 வயது சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமியை, சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்ற அந்த நபர், மதுபோதையில் இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்து, குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தித் தோகைமலை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதோடு, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்