திருப்பூரில் பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் மணிகண்டன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவி ஒருவருடன் பழகி வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலத்தகாரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக மாணவிக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்ட நிலையில் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவிக்கு இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் இதை தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
