மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றும், வேலை செய்யாமல் இலவசமாகப் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவே ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசு மத்திய அரசின் நல்ல திட்டங்களை ஏற்பதில்லை என்றும், தங்களுக்குச் சாதகமான திட்டங்களில் தங்களின் பெயர்களைப் போட்டுக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் வரும்போது திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், இன்னும் தேர்தலையே சந்திக்காத அந்தக் கட்சி, கொள்கைகளைச் சொல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

ஒரு பெண் நிர்வாகி குறைகளைச் சொல்ல வந்தபோது காரை நிறுத்தாமல் சென்றது ஒரு தலைவருக்கு அழகல்ல என்றும், அவர் இறங்கிப் பேசியிருந்தால் அந்தப் பெண் இன்று தற்கொலை முயற்சி செய்திருக்க மாட்டார் என்றும் சரத்குமார் தெரிவித்தார். பாஜக உடனான தொகுதிப் பங்கீடு குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத் தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.