மீரட்டில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெளியே பிபிஏ தேர்வு எழுதிவிட்டு திரும்பிய இரண்டு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது. ஒரு மாணவி தேர்ச்சி பெற்ற மாணவர் குறித்து ஏதோ ஒரு கருத்தைச் சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தனது பெல்ட்டை கழற்றி அந்தப் பெண்ணை விரட்டி விரட்டித் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியபோதும், மற்றவர் விடாமல் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக அடித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த மற்ற மாணவர்கள் சண்டையைத் தடுக்க முயலாமல், தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். கல்லூரி பாதுகாப்புப் பணியாளர்கள் அங்கு நின்றிருந்தும் இந்த மோதலைத் தடுக்க முன்வரவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசாருக்கு தெரிந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.