சீனாவில் காதலி தன்னை விட்டுப் பிரிந்து விடுவார் என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் விசித்திரமான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். “நீ என்னை விட்டுப் பிரிந்தால், நான் ஜன்னல் வழியாகக் கீழே குதித்துவிடுவேன்” என்று அவர் தனது காதலியிடம் சபதமேற்றுள்ளார். சொன்னது போலவே, அடுத்த கணமே அந்த இளைஞர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்துள்ளார். இந்தக் காட்சியைக் கண்டவர்கள் முதலில் பதறிப்போனாலும், அடுத்த நொடியே அங்கிருந்தவர்களுக்குச் சிரிப்புதான் வந்தது.

ஏனெனில், அந்த இளைஞர் குதித்தது மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அல்ல; மாறாக, அது ஒரு கட்டிடத்தின் தரைத்தளம் (First Floor) ஆகும். ஜன்னலைத் தாண்டிக் குதித்த அவர், வெறும் சில அடி உயரத்தில் இருந்து தரையிலேயே விழுந்தார். இந்த “அதிர்ச்சிகரமான” தற்கொலை முயற்சியின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.