சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில நெகிழ்ச்சியான காட்சிகள், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்குப் பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில், தாகத்தில் தவித்த ஒரு சிறிய பூனைக்குக் குழந்தை ஒன்று தனது பிஞ்சு கரங்களால் தண்ணீர் கொடுக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது.

வீடியோவில், குடிநீர் குழாயிலிருந்து கசிந்து வரும் தண்ணீரைத் தனது உள்ளங்கையில் ஏந்தி, அதனை அந்தச் சிறுவன் பூனைக்குக் குடிக்கக் கொடுக்கும் அழகிய தருணம் பதிவாகியுள்ளது. மனிதாபிமானமும் கருணையும் வயதைப் பொறுத்தது அல்ல, அது வளர்க்கப்படும் சூழலையும் எண்ணத்தையும் பொறுத்தது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இதுவரை 1.95 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

<a href=”http://

“>
“விலங்குகள் மனிதர்களை விட நன்றியுள்ளவை” என்றும், “இக்குழந்தையின் வளர்ப்பு7 பெருமைக்குரியது” என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.