ஆந்திர மாநிலம் மங்களகிரியில் 13 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மங்களகிரி காவல்jதுறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஷேக் காதிர் பாஷா (50), ஷேக் சலீம் (42), ஷேக் ரப்பானி (39) மற்றும் ஷேக் கமல் சாஹேப் (25) ஆகிய நான்கு நபர்களையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.