லடாக்கில் செந்நிற நரி ஒன்று பனியில் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த உண்மையை விளக்கி இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் நரிக்கு அருகில் சில சுற்றுலாப் பயணிகள் பிஸ்கட் மற்றும் உணவுகளை வீசுவதைக் காண முடிகிறது.
இந்த வனவிலங்குகளுக்கு இதுபோன்று மனித உணவுகளை வழங்குவது அவற்றின் இயற்கையான வேட்டையாடும் பழக்கத்தைச் சீர்குலைக்கும் என்றும், இது போன்ற செயல்கள் அந்த விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்விற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் வனவிலங்குகள் மனிதர்களைச் சார்ந்து வாழப் பழகினால், அவை காடுகளில் சுயமாக உணவு தேடும் திறனை இழந்துவிடும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அழகிய புகைப்படங்களுக்காகவும், வீடியோக்களுக்காகவும் வனவிலங்குகளுக்கு உணவளித்து அவற்றைக் கவர்வது அந்த உயிரினங்களுக்குச் செய்யும் துரோகம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இயற்கையை அதன் போக்கிலேயே ரசிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளின் வாழ்விடங்களில் மனிதத் தலையீடுகள் அவற்றின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்தச் செய்தியின் முக்கிய நோக்கமாகும்.
