சாலை விதிகள் என்பவை வெறும் சட்டப்புத்தகத்திற்காக மட்டும் அல்ல, அவை நம் ஒவ்வொருவரின் உயிரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெரிசலான ஒரு சந்திப்பில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தபோதும், அதனைப் பொருட்படுத்தாமல் ஒரு பைக் ஓட்டுநர் வேகமாகச் செல்ல முயன்றார்.

 

 

View this post on Instagram

 

A post shared by हमRATLAMI_OFFICIAL🇮🇳 (@humratlami_official)

அதே நேரத்தில், பச்சை விளக்கு விழுந்ததால் எதிர்புறமிருந்து வந்த மற்றொரு பைக் மீது அவர் மோதி விபத்துக்குள்ளானார். இந்த மோதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்றவருக்கு அங்கேயே ஒரு தக்க பாடம் கிடைத்தது.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன், அந்தப் பைக் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதற்கு முன்னதாக, போலீஸ்காரர் உரத்த குரலில் “மிகச்சிறப்பு, அருமை”  என்று கைதட்டிப் பாராட்டுவது போலக் கிண்டலாகக் கத்தினார்.

விபத்தில் சிக்கியவரைப் பார்த்து போலீஸ்காரர் இப்படிச் சொன்னதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும், விதியை மீறினால் விபத்து தான் மிஞ்சும் என்ற உண்மையை அவர் பாணியில் உணர்த்தியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நகைச்சுவையுடன் புகட்டுவதாக நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.