உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது மாணவி அஹானா, அளவுக்கு அதிகமான ஜங்க் ஃபுட் (Junk Food) சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். சிறுவயது முதலே பர்கர், பீட்சா, சௌமெய்ன் மற்றும் மேகி போன்ற உணவுகளுக்கு அடிமையான அவர், வீட்டின் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது செரிமான மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் குடலில் ஓட்டை (Perforated intestine) ஏற்பட்டுள்ளது.
இதற்காகத் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் பலனின்றி, மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கடுமையான உடல் பலவீனம் மற்றும் குடல் பாதிப்பு காரணமாக அஹானாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
துரித உணவுகளில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அதிகப்படியான கொழுப்பு, வளரும் பருவத்தில் இருக்கும் சிறுமியின் உடலைத் தாங்க முடியாத அளவிற்குச் சிதைத்துள்ளது இந்தச் சம்பவம் மூலம் உறுதியாகியுள்ளது.
தங்களது பிள்ளைகள் வெளி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தடுத்து, சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்கு இந்தச் சோகச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
