மங்களூரு நகரத்தில் டிராஃபிக்கில் சென்ற ஒரு மாருதி ஆல்ட்டோ காரின் பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஒரு ஸ்டிக்கர் இப்போது இணையதளத்தையே ஆக்கிரமித்துள்ளது. பொதுவாக கார்களின் பின்னால் ‘Keep Distance’ (தள்ளி நில்லுங்கள்) என்று போட்டிருப்பார்கள். ஆனால், இந்தக் கார் உரிமையாளர் ஒரு படி மேலே போய், “Keep Distance, EMI Pending” (தள்ளி நில்லுங்கள், இன்னும் இ.எம்.ஐ பாக்கி இருக்கிறது) என்று எழுதியுள்ளார். அதாவது, “என் கார் மீது மோதிவிடாதீர்கள், இன்னும் நான் கடனைக் கூட கட்டி முடிக்கவில்லை” என்று அவர் காமெடியாகத் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 5.4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “இது சிரிப்பா இருந்தாலும், இதுக்குள்ள ஒரு பெரிய வலியே இருக்கு” என்று மிடில் கிளாஸ் மக்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். “பசங்க இதைப்பார்த்து சிரிப்பாங்க, ஆனா குடும்ப பாரத்தைச் சுமக்கிற ஆண்களுக்குத் தான் அந்த வலி தெரியும்” என்று பலரும் எமோஷனலாகப் பதிவிட்டு வருகின்றனர். இன்று இ.எம்.ஐ (EMI) வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு சாமானியனின் கதையையும் இந்த ஒரே ஒரு ஸ்டிக்கர் அழகாகச் சொல்லிவிட்டது.
