எம்ஜிஆர் காலத்திலிருந்தே அரசியலில் தடம் பதித்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்தவர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அவருக்கு அந்தக் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டையன் நீண்டகாலமாக தன் வசமிருந்த கோபி தொகுதியில், இந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட அவரது அண்ணன் மகன் கே.கே. செல்வம் விருப்ப மனு அளித்துள்ளார்.
தனது சொந்தத் தொகுதியிலேயே குடும்பத்தைச் சேர்ந்தவரே தனக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகி வருவது, செங்கோட்டையனின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய சவாலாகவும் திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.
