தண்ணீருக்குள் மூச்சடக்கி நிற்பதே சவாலான விஷயம், ஆனால் ஒரு இளைஞர் தண்ணீருக்குள் நின்றபடி நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தண்ணீருக்கு அடியில் மிகவும் அமைதியாகவும், சமநிலையுடனும் நிற்கிறார்.
அடுத்த நொடியே, அவர் தனது கைகளை உயர்த்தி, மிக நேர்த்தியான நடன அசைவுகளுடன் மெதுவாக மேல்நோக்கிச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு ஒரு மாயாஜாலம் போல உள்ளது. தண்ணீருக்குள் இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் யாராலும் செயல்பட முடியுமா என நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த வியக்கத்தக்க வீடியோவை ‘hydroman_333’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர்.
“இது தண்ணீருக்கு அடியில் நடக்கும் ஒரு மேஜிக்” என்றும், “இவர் நிச்சயம் அக்வாமேன் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்” என்றும் நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
சாதாரணமாக நீச்சல் குளத்தில் விளையாடுவதை விட, இப்படி ஒரு கலைநயத்துடன் கூடிய ஸ்டண்ட் வீடியோக்களைப் பார்ப்பது மக்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
