ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை “தீய சக்தி” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மிகவும் காட்டமான பதிலடியைக் கொடுத்தார். ”யாராக இருந்தாலும் ஆக்கபூர்வமான மற்றும் முறையான கேள்விகளைக் கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறிய அமைச்சர், தேவையற்ற மற்றும் அற்பத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், “தூக்கத்தில் இருப்பவர்கள் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை” என்று அவர் கூறியது விஜய்யைக் குறி வைத்துத் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் தவெக மற்றும் திமுக இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
