வட்டமாகவும், உப்பலாகவும் பூரிகள் செய்வது சமையலறையில் ஒரு சவாலான காரியமாகப் பார்க்கப்படும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள ஒரு கருவி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பூரி மேக்கர் இயந்திரங்களுக்குப் பதிலாக, ஒரு மரக்கட்டை மற்றும் அதன் அடியில் ஒரு டிபன் பாக்ஸை இணைத்து அவர் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், மாவு உருண்டையை வைத்து மரக்கட்டையால் அழுத்தியவுடன், சில நொடிகளில் அது மிகச் சரியான வட்ட வடிவப் பூரியாக மாறுவது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள், அந்த இளைஞரின் படைப்பாற்றலைப் பாராட்டி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Max-manthan (@maximum_manthan)

“அம்மாவின் வேலையை இவர் மிகவும் எளிதாக்கிவிட்டார்” என்றும், “இது போன்ற திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.