இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இப்பட்டியலை வெளியிடுகிறார். இந்தத் திருத்தப் பணிகளின்போது உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வரைவுப் பட்டியல் வெளியானவுடன், வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை அந்தந்த மாவட்ட இணையதளங்கள் அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
விடுபட்டவர்கள் அல்லது பிழை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் ஜனவரி மாதம் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
