தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அதில் பல பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தே உணவை சமைத்து எடுத்து வந்திருந்தனர். மைதானத்தில் வசதிகள் குறைவாக இருந்தாலும், புழுதி பறக்கும் அந்தத் தரையிலேயே அமர்ந்து, எவ்வித தயக்கமும் இன்றி அந்த உணவைப் பகிர்ந்து உண்டனர்.

​தங்கள் தலைவன் மீதான அன்பிற்காக எத்தகைய சிரமத்தையும் பொருட்படுத்தாத அந்தப் பெண்களின் செயல் காண்போரை நெகிழ வைத்தது. “எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களிடம், குறிப்பாகப் பெண்களிடம் இவ்வளவு பெரிய செல்வாக்கைப் பெற்றிருப்பது விஜய் மட்டும்தான்” என அரசியல் நோக்கர்கள் வியந்து வருகின்றனர்.